தாமதமாய் வென்றாலும் - இவன்
தரணியையே வெல்லுவேன் ...
அழியாத கவிபடைத்து - உலக
ஆயுளையே மிஞ்சுவேன் ...
தமிழனென்ற கர்வத்தை - எம
தர்மனிடமும் காட்டுவேன் ...
உயிர்பிரியும் நேரம்கூட - தமிழனென்று
உரக்ககுரல் மீட்டுவேன் ...
என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )
No comments:
Post a Comment