Thursday, October 3, 2013

Love





Nee
Yennai vittu nadakkum bothu,
Un nizhalaiyaavathu sonthamaakkikolla
Unnidame odi varugirathu, yen Uyir..
Nee
Solla marantha vaarthaigalai
Solli rasikkumbothu
Thozhi yennai paithiyam yendraal,
Aam… avan mel yena koorikolgiren..
Unnaal
Yen manathil
Yetpatta kaayathitku
Kaalathidam bathil irunthaalum,
Unnal Sollapadaatha Kaadhalaiyae
Nambikondirukirathu ..
Yen manam..
Un Kadhal
Sethuvittathu Yena Yen buthi koorinaalum
Un mouthathai kaadhal yena nambikondirukkum
Yen manathidam..

Yenna samaathanam Solven?




Uyirillaamal
Udal Vaazha Mudiyuma?
Vaazhgirene..
Ne Illaamal Naan….




Unnai Patri
Yezhuthiya Kavithaigalellaam
Kizhiththu YerinthuKondirukkiren..
Un Peyarai Pol
Azhagaai Illai Yena…





Yen Uyir Thedalukku
Vidai Kidaithathu..
Unnai Kandapothu…




Yellorukkum Pengalukkum
Avargal yethirkaala kanavanai patriya
Thedal irukkum..
Athil naan mattum maarupattaval..
Yenenil, Naan Unnai thedavillai..
Unakkul Irukkum
Yennai Thedugiren..





Naan Uranginaalum…
Urangaatha
Un Nyaabagangal…





Nee
Yennudan Nadakkumbothu,
Unnudan Nadakkiren..
Nee
Vilagi Nadanthaal….,
Un Nizhaludan Nadakkiren.. 


Wednesday, October 2, 2013

காதல்


உறவுகளை உடைத்து,
உணர்வுகளை தகர்த்து,
உடமைகளை தொலைத்து,
உண்மைகளை மறுத்து,
உலகை மறந்து,
உயிர்மட்டும் விழித்திருப்பதுதான்,
காதல்!


தோற்றுப் போன இதயம்


தோற்றுப் போன இதயம்...!!! (Mano Red)


காதல் முறிவென்பது,
இணைந்து காதல் செய்த
இரு இதயங்களில்,
ஒரு இதயம் செய்யும்
முட்டாள்தனமான
காதல் கருக்கலைப்பு..!!

உயிரென்றும்,
உணர்வென்றும்,
உயிர் மூச்சென்றும்,
நினைவென்றும்,
நீங்கா சுவாசமென்றும்,
அழகென்றும் அதிசயமென்றும்,
பொய்களை அள்ளிவிட்ட காதல்
விட்டுப் பிரியும் பொழுதே
பொய்யாய் உண்மை பேசி நடிக்கும்..!!

மோகம் சூழ் மேகமாய் காதல்,
இதயமுள்ள நிலவைக் காதலிக்கும்
இதயமற்ற காதலர்களாய் நட்சத்திரங்கள்..!!
இரவெல்லாம் காதல் கொண்டு
இனிய இசை பாடி மகிழ்ந்து
விடியும்வேலையில்
நிலவைத் தவிக்க விட்டு
நட்சத்திரங்கள் ஓடி விட,
காதலுடன் காத்திருந்த நிலவோ
கரைந்து மெலிந்து மறைகிறான்..!!

காதலில் திருடன் போல்
சுற்றித்திரிந்த நாட்களில்,
இதயம் உள்பட எல்லாம்
திருடு போகுமே தவிர
காதலுக்காக எதையும்
திருடி வைக்காது உண்மைக் காதல்..!!
உயிர் தவிர எல்லாம் இழந்த பின்பு
காதலில் இழப்பதற்கு என்ன இருக்கு..??

பாதி உயிருடன் கலந்த காதல்,
மீதி உயிர் தேடி காதலில்
பாதிக்கிணறு கடக்கையிலே
சிறு மூளையில் விளக்கு எரியும்,
சாவு பயம் கண்ணில் தெரியும்,
மன வெளிச்சத்தை இருள் மூளும்,
மானம் காற்றில் பறக்கும்,
நிழல் கூட பேயாய் மாறும்,
இவையெல்லாம் சூடு வைத்தாலும்
சூடு சொரணையின்றி காதல் சிரிக்கும்..!!

எல்லாம் கடந்து,
காதல் தேனாய் கசந்து,
எல்லை மீறும் போது
அத்தனையும் உடைந்து,
அவசரமாய் பிரிந்து,
காதல் தலை குனிந்து நிற்கையில்
நரகமும் இரக்கப் பட்டு அழும்..!!

காலத்தினும் அழியாத
காதல் கூத்து கலைந்து
நாடக திரை மூடும் போது,
கிழிந்த காதல் கடிதங்களும்,
நசுக்கப்பட்ட ரோஜாக்களும்,
ஆணியறைந்த இதயமும்,
காத்துகிடந்த கடிகாரம் மட்டுமே
தோற்றுப் போன இதயத்திடம்
மிச்சமாய் இருக்கும்...!!!


காதல் கவிதை



காதல் கவிதை - படித்தவை


புவி ஈர்ப்பு விசையினால் அப்பிள் விழுந்ததாம் நியூட்டனின் விதி - உன்
விழி ஈர்ப்பு விசையினால் நானும் காதலில் விழுந்தேன் இது என் தலை விதி!!!

புவி ஈர்ப்பு விசையில் விழுந்திருந்தால் கூட எழுந்திருப்பேன் ஆனால் - உன்
விழி ஈர்ப்பு விசையில் விழுந்ததால் எழ முடியாமல் தவிக்கிறேன்♥♥


உறவுகள்...

உறவுகள்...


மனிதனின்
முதுகெலும்பு
உறவுகள்...!


ஒரு தலைவர்

ஒரு தலைவர் இளமையில் கல்வி
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை கல்விக்காகவே
வாழ்ந்தார்

ஒரு தலைவர் இளமையில் பகுத்தறிவு
அறியாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பகுத்தறிவுக்காகவே
வாழ்ந்தார் ..

ஒரு தலைவர் இளமையில்
பணம் இல்லாமல் இருந்தார் .. ஆனால்
இறுதி வரை பணதிர்க்காகவே
வாழ்ந்தார்

எல்லோரும் தலைவனாய்
ஆவதுமில்லை - ஆனா
எல்லோரும் நல்லவராய்
இருப்பதில்லை..வரும் போது
நல்லவராய் வந்தவரெல்லாம்
இறக்கும் போது நல்லவராய்
இறப்பதில்லை ..

- வை . நடராஜன்

தமிழ் - கவிஞர்.செந்தமிழ் தாசன்


தாமதமாய் வென்றாலும் - இவன்
தரணியையே வெல்லுவேன் ...
அழியாத கவிபடைத்து - உலக
ஆயுளையே மிஞ்சுவேன் ...

தமிழனென்ற கர்வத்தை - எம
தர்மனிடமும் காட்டுவேன் ...
உயிர்பிரியும் நேரம்கூட - தமிழனென்று
உரக்ககுரல் மீட்டுவேன் ...

என்றும் எழுத்தாணி முனையில் ...
கவிஞர்.செந்தமிழ் தாசன் ( பாடலாசிரியர் )

இடர்பாடு



........இடர்பாடு.......
----------------------------

என்னையோ !
என் உணர்வுகளையோ !
என் உடமைகளையோ !
நீ தீண்டினால் அது உன் உரிமை !!
அதையே !
எனை சூழ்ந்தவரோ வேறு எவரோ,
செய்தால் அது அத்துமீறல் !
பொறுக்காது அவர்செயலை,
மதிக்காத மனம் !
உனக்கானவள் மட்டிலுமே நான் !
என்ற வேட்கைதான்,
வெந்து கங்காகி ஆறும் அடங்காமல் !!

-Bharath Kannan


மதுவின் மயக்கத்தில்


தினம்தினம் மதுவின் மயக்கத்தில்
தன்னையே மறந்துப்போனவனே...!

உன் வாலிபம் மரித்துக்கிடப்பது
இந்த மதுக் கோப்பையிலா..!

வேர்பிடித்து அரும்பும் போதே
அறுந்து விடுவதா வாழ்க்கை...

உன் வசந்தத்தின் துவக்க சங்கமம்
வீதியில் கிடக்கும் பலி பீடத்திலா...

எல்லா எதிர்காலமும் எரிந்து போகும்
முறையற்ற உன் தடுமாற்றத்தில்...

வாழ்க்கையென்ற வாலிபப் பூங்காவில்
நீ பிணங்களோடு பிணங்களா...

உனக்கு மகிழ்ச்சியும் துக்கமும்
ஏன் போதையின் போதனையில்..?

நம்பிக்கையென்ற நாளைய பொழுதின்
முளைவிடும் இளைய நாற்றே...!

போதையின் சுமையினை
கொஞ்சம் நிறுத்திவை
நம்பிக்கையின் துடுப்பை பழக்கப்படுத்து
உன் நெடுந்தூர பயணத்திற்கு...

உன் வைகறையை
பூபாளத்தோடு பூக்கவிடு...

அன்று உன் காலடியில்
காலம் பணியும்...


தோற்கப் பழகுவோம்...!!!

தோற்கப் பழகுவோம்...!!!


தோல்வி தரும் சோகத்தினை
தோளில் சுமந்து நிற்கையில்,
வேட்கையுடன் வெற்றிக்கனி பறிக்க
விடாமுயற்சியுடன் வா நண்பா
தோற்கப் பழகுவோம்..!!

இன்னல்கள் கூடி வந்து
இகழ்ந்து சிரித்தாலும்,
இறப்பு கண்முன்னே
இழிவாய் நின்றாலும்,
தோல்வி கண்டு பயம் வேண்டாம்
தோற்கப் பழகுவோம்..!!


முதல் முயற்சியிலே
முழு வெற்றியென்பது,
அனுபவமில்லா ஆசிரியனிடம்
அரைகுறையாய் பயின்றதற்குச் சமம்..!!
நல்ல தோல்விகள் தரும்
நன் மந்திரம் கற்க
தோற்கப் பழகுவோம்..!!


கசக்கும் தோல்வி நிலையை
களிப்புடன் ஏற்கும் போது,
இனிக்கும் வெற்றி வந்து
இனிமையுடன் கை கோர்க்கும்..!!
தட்டிப் பறிக்கும் வெற்றி வேண்டாம்
தனித்துவம் பெற்றுத் திகழ
தோற்கப் பழகுவோம்...!!
விட்டுகொடுக்கும் நட்பையும்,
வினையின் போது
விட்டுவிலகும் நட்பையும்,
வெளிக்கொணர்வது தோல்வியே..!!
தீய நட்பிலிருந்து விலகி
தீங்கில்லா உண்மை நட்பறியத்
தோற்கப் பழகுவோம்..!!!


சிந்தனையில் தீமூட்டவும்,
சிறு மூளையை கிளறிவிடவும்,
அதிசிறந்த திட்டமிடவும்,
அறிவுச் சுடரை புதுப்பிக்கவும்,
அவகாசம் தரும் தோல்வியை ஏற்றுத்
தோற்கப் பழகுவோம்...!!!


கடந்து போகும் தோல்வி கண்டு
துவண்டு விட வேண்டாம்..!!
தற்காலிகமான தோல்வியின் வலி
தன்னிகரில்லா வெற்றிக்கு வழி..!!
வெற்றியென்பது மரமெனில்
தோல்வியே அதன் விதை..!!
தொடர் வெற்றி பெற நன்றாகத்
தோற்கப் பழகுவோம்...!!